1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj
Last Modified: புதன், 7 ஜூலை 2021 (23:49 IST)

சில செய்யக் கூடாத ஆன்மிக செயல்கள் அறிவோம்

பெண் தெய்வங்களான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை சிறப்பு. பெண்கள் இரவில் விளக்கு வைத்தவுடன் அழக் கூடாது. காலை ஆட்டக் கூடாது. மல்லாந்து படுக்கக் கூடாது.
 
விளக்கு வைத்த பின் வளையல்களைக் கழற்றக் கூடாது. திருமணம் ஆன பெண்கள் கைகளில் வளையல் அணியாமல் உணவு பரிமாறக் கூடாது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வீட்டை விட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பி விட வேண்டும். அன்று பிறர் வீடுகளில் தங்கக்  கூடாது.
 
 
ஒற்றை ருத்திராட்சத்தைக் கழுத்துக் குழிக்கு மேல் கட்டவேண்டும், கீழே இறங்கக் கூடாது.
 
ருத்திராட்சம், துளசி மணிம் ஆபடிகம் போன்ற மாலைகளை ஜபம், பூஜை, ஜோமம் போன்ற காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் அணியக்  கூடாது.
 
கோவிலுக்கு செல்லும்போதும் பூஜை செய்யும்போதும் பெண்கள் முடியைத் தொங்கவிடாமல் நுனி முடிச்சுப் போடவேண்டும்.
 
வீட்டில் சுவாமியிடம் ஏற்றிய தீபத்தை வாயினால ஊதி அணைக்கக் கூடாது. விரலால் பால் திட்டு வைத்தோ குங்குமம் வைத்தோ, பூவாலோ  கை அமர்த்தலாம்.
 
துளசி, வில்வம் இவற்றை செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பெளர்ணமி, துவாதசி, சாயங்காலம், இரவு நேரம் பறிக்கக் கூடாது.
 
ஒரு காலினால் மற்றொரு காலினைத் தேய்த்து அலம்புதல் கூடாது. பூஜை செய்யும்போது பூத்தட்டை மடியில் வைத்து பூவெடுத்து பூஜை  செய்யக் கூடாது.
 
கன்னிப் பெண்கள் சாந்துப் பொட்டையே வைத்துக் கொள்ள வேண்டும். திருமணம் ஆன பெண்கள்தான் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ள  வேண்டும்.