1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 5 அக்டோபர் 2024 (18:55 IST)

இன்று புரட்டாசி 3வது சனிக்கிழமை.. திருப்பதியில் கருட சேவை..!

tirupathi
சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி மாதம், புதன் பகவானுக்குரியதாகும். இந்த மாதத்தில், புதன் கிரகத்தின் அதிபதியாக மகா விஷ்ணு உள்ளார்; எனவே, புரட்டாசி மாதம் விஷ்ணு பகவானுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது.
 
திருப்பதியில், ஏழுமலையான் ஒரு புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்துள்ளார். இதனால், திருப்பதி சந்திரனுக்குரிய ஸ்தலமாகும். சந்திரனின் மகனான புதனின் ஆதிபதியாக மகா விஷ்ணு இருப்பதால், புரட்டாசியில் அவரை வழிபடுவது மகிழ்ச்சி தரும்.
 
புரட்டாசி மாதத்தில், 3-ம் சனிக்கிழமையன்று திருப்பதியில் நடைபெறும் கருட சேவைக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபடுபவர்கள், சனியின் கெடுபலன்களை நீக்குவதோடு, பல நன்மைகளை அடைவார்கள். மேலும், 3 தலைமுறை முன்னோர்களுக்கும் மோட்சம் கிடைக்குமென்பது ஐதீகமாகும்.
 
புரட்டாசி சனிக்கிழமையில், 108 திவ்ய தேசங்களில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று நல்லெண்ணை கொண்டு விளக்கேற்றி, துளசி சாற்றி வணங்குவது மிகவும் சிறந்தது. பின்னர், மகாவிஷ்ணுவின் அருளுடன், பெருமாளுக்கு பிடித்த அவல், வெண்ணெய், பால், பாயாசம், பலகாரம் போன்றவற்றை படையலாய் வழிபடுவது பரிசுத்தமானது.
 
இதில், புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபட்டால், பெருமாளின் அருளோடு, குலதெய்வத்தின் அருளையும் முழுமையாகப் பெறலாம்.
 
Edited by Mahendran