புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

ஆன்மிக அடையாளமான திருநீறின் மருத்துவ நன்மைகள்

“நீரில்லா நெற்றி பாழ்” என்பதன் அர்த்தம் நமது நெற்றியில் உள்ள ஆக்கினா சக்கரத்தை தூண்டி உடலுக்கு தேவையான சக்தி  கிரகிக்கபடுகிறது விபூதி என்று வள்ளலார் கூற்றில் அறியலாம்.

 
எப்பேர்பட்ட வயிற்று வலியையும் ஒரு சிட்டிகை திருநீறு தீர்த்து விடுகிறது பத்து நொடிகளில் ……எப்படி ?
 
ஐப்பசி கார்த்திகை மாதங்களில் ஏற்படும் கடும் மழையில் நனைந்து வந்தவுடன் திருநீறு பூசும் போது சளியோ,காய்ச்சலோ  வருவதில்லை…..ஏன்?
 
திருநீறு தொடர்ந்து பூசுபவர்களுக்கு வெண்குஷ்டம் எனப்படும் குறைபாடு அறவே ஆண்டாது அதற்கும் காரணம் உள்ளது….
 
தலைக்கு குளித்தவுடன் பலருக்கு தலைவலி வரும் தலையில் நீர் கோர்த்து,அதற்கு திருநீறு பூசினால் தலையில் உள்ளநீரை  வெளியேற்றி உடலுக்கு நன்மை பயக்கும்.

 
உலோகத்தின் அயனி வடிவம் தான் சாம்பல் என்பது அனைவரும் அறிந்ததே மாட்டின் சாணம் எரித்து வருவது சாம்பல்  இவற்றை எரிக்கும் போது சாணத்தில் உள்ள கார்பன் வெளியேறி விடும் உலோக அயனிகள் மட்டுமே மிஞ்சும்.
 
உடல் என்பது ஒரு வேதியியல் தொழில் சாலை நாம் சாப்பிடும் உப்பில் உள்ள சோடியம் குளோரைடை சிதைத்து  பொட்டாசியமாக உடலானது எவ்வாறு மாற்றுகிறதோ அது போல தான் மாடும் ரசவாதியாக செயல்படுகிறது
 
பூமியில் உள்ள தாவரங்கள் குறிப்பாக அறுகம்புல் உலோகங்களை அயனிகளாக மாற்றி தன்னகத்தே கொண்டு உள்ளது அதை  சாப்பிடும் மாடுகள் தனது வயிற்றில் சுரக்கும் அமிலம் மூலமாக மேலும் அயனியாக மாற்றுகின்றது இந்த சாணத்தை  பயன்படுத்தி விபூதி செய்து உடலில் உள்ள கழிவுகளை அகற்றும். விபூதி ஒரு சிறந்த பற்பம் கழிவு நீக்கி.
 
இவற்றுடன் சேர்க்கபடும் திருநீற்றுபச்சிலை மற்றும் வில்வம் பழத்தின் ஓடு இவை இரண்டும் மிகச்சிறந்த மருத்துவ பண்புகளை  கொண்டது என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.