1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 மே 2024 (20:03 IST)

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் கோவிலின் சிறப்புகள் என்னென்ன?

ஸ்ரீவில்லிபுத்தூர் என்றதும் அனைவருக்கும் ஆண்டாள் கோவில் தான் ஞாபகம் வரும். ஆனால் இங்கு மடவார் வளாகம் என்ற கோவில் இருக்கும் நிலையில் அதன் சிறப்புகளை பார்ப்போம்.
 
வைத்தியநாதசுவாமி கோவில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது விருதுநகர் மாவட்டத்தின் மிகப் பெரிய சைவத்தலமாக விளங்குகிறது.
 
இக்கோயில் விருதுநகர் மாவட்டத்தின் மிகப்பெரிய சிவத்தலமாக விளங்குகிறது. சிவனின் திருவிளையாடல்களில் 24 திருவிளையாடல்கள் இக்கோயிலில் நடத்தப்பட்டுள்ளது. இக்கோயிலின் வைத்தியநாதர் நோய் தீர்க்கும் பெருமான் என்பதால் இங்கு மகா அஷ்டமியன்று பக்தர்கள் சாப்பிட்ட இலைமீது அங்கப் பிரதட்சினம் செய்யும் வழக்கம் உள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் மூன்று நாள்கள் காலை சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படும் சிறப்புடையது.மன்னர் திருமலை நாயக்கரின் தீராத வயிற்று வலியைத் தீர்த்தமையால், மன்னர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் பூஜை முடிந்த மணியோசை கேட்ட பிறகு தான் உணவருந்துவாராம். ஆலாட்சி மணிகளின் ஒலி கேட்பதற்காக சாலை நெடுகிலும் மணி மண்டபங்கள் / முரசு மண்டபங்கள் எழுப்பினார். கோவிலின் தல வரலாற்றிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் பாதையில் சில பழைய மண்டபங்களை சிதிலமடைந்த நிலையில் இன்றும் காணலாம்.
 
கோவில் அமைப்பு: ஐந்து நிலைகளைக் கொண்ட கோபுரம். மூன்று வாயில்கள். வைத்தியநாத சுவாமி மற்றும் சிவகாமி அம்பாள் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மூலவர் சன்னதி. விநாயகர், சுப்ரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரி போன்ற பிற தெய்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன
 
கோவிலின் மற்ற சிறப்புகள்: அமைதியான சூழல். சுத்தமான வளாகம். பக்தர்களுக்கு வசதிகள் நிறைந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மற்ற கோவில்களுக்கு எளிதில் செல்ல முடியும்.
 
 
Edited by Mahendran