திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (18:58 IST)

கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் சிறப்புகள்..!

கும்பகோணத்தில் இருக்கும் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் புராண காலங்களில் இருந்து பெருமைக்குரியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
12 சிவன் தலங்களீல் கடைசியாக இருப்பது கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் என்பதும் இந்த கோவிலில் குறித்து சில புராணங்களிலும் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
 
அனைத்து சிவன் கோவில்களில் இருக்கும் நெறிமுறைகள் இந்த கோயிலிலும் உள்ளது என்றும் மாசி மக பெருவிழா தினத்தில் ஏகாம்பரேஸ்வரர் மகாமக குளத்திற்கு எழுந்தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த கோவிலில் உள்ள ராஜகோபுரம் நான்கு நிலைகளை கொண்டு அழகாக அமைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த கோவிலில் உள்ள இறைவன் ஏகாம்பரேஸ்வரர் , இறைவி காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த கோவிலில் உள்ள ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றது என்பதும் குறிப்பாக காமாட்சி அம்மன் ஓவியம் அற்புதமாக அனைவரையும் ரசிக்க வைக்கும் தெய்வீக கலை அம்சத்துடன்  அமைக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran