திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 நவம்பர் 2023 (19:20 IST)

கார்த்திகை தீபத்திருநாளில் எப்போது தீபம் ஏற்ற வேண்டும்?

Karthigai
கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினம் வீட்டில் தீபம் ஏற்றுவது எப்போது என்பது குறித்து பார்ப்போம். 
 
பொதுவாக கார்த்திகை தீபம் அன்று பிரம்ம முகூர்த்த வேலையில் அதாவது காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் விளக்கேற்றினால் புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுவது உண்டு.
 
பிரதோஷ வேளையான மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி கிடைக்கும் என்றும் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் இதனால் திருமண தடை விலகும் என்றும் கூறப்படுகிறது.  
 
நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கேற்ற வேண்டும் என்றும் விளக்கேற்றினால் வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும் என்றும் மகிழ்ச்சி நிலவும் என்றும் குழந்தை பாக்கியம், மனதுக்கேற்ற வரன் கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran