புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: புதன், 25 ஜனவரி 2017 (14:38 IST)

கடவுள் சன்னதியில் வணங்க வேண்டிய வழிமுறைகள்......

தலை, இரு கைகள், இரு காதுகள், இரு முழங்கால், மார்பு ஆகிய எட்டு அங்கங்களும் நிலத்திலே படுமாறு விழுந்து வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம், இது ஆண்களுக்கு உரியது.

 
தலை, இருக்கைகள், இரு முழங்கால்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் படுமாறு விழுந்து வணங்குதல் பஞ்ச-அங்ச நமஸ்காரம்  பெண்களுக்கு உரியது.
 
நமஸ்கரிக்கும் போது கால் நீட்டும் பின்புறத்தில் எந்த சந்நிதியும் இருந்தல் கூடாது. ஆகவே தான் கொடி மரத்தருகே எந்த  தெய்வ சன்நிதியும் இருக்காது.
 
பம்பை நதியில் இறங்கும் முன் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டு காலை வைக்க வேண்டும். முதலில் காலை  அலம்பக் கூடாது.
 
அமைதியான காற்று எங்கும் எரிந்து பரந்த செறிந்து கிடப்பினும் அதை உடலுக்கு இன்ப மூட்டும் வண்ணம் வீசுமாறு செய்ய  ஏற்ற விசிறி தேவை. விசிறி சுழல்வதால் நம்மைச் சூழ்ந்திருக்கும். சிறு சிறு மாசுகளும் தூற்றப்பட்டு அகற்றப்படுகின்றது.
 
அதுபோலவே அன்பும், தொண்டும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அமைந்து அழுந்திக் கிடப்பினும் அவற்றை தூண்டி இன்பம்  நல்குவதும், மனமாசுக்களைத் துடைத்து எறிவதும் விரதம் பூண்டு நாம் ஏற்கும் வழிபாடாகும்.