வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2022 (11:14 IST)

புரட்டாசி மாதத்தில் வரும் முக்கிய வழிபாடுகளும் பலன்களும் !!

Lord Perumal
புரட்டாசி மாதம் அதிக வழிபாடுகள் நடத்த வேண்டிய மாதமாகும். புரட்டாசியில் வீடு கட்டும் பணியை தொடங்கினால் உடல் நலம் பாதிக்கும் என்று வாஸ்து குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புரட்டாசி மாதம் ராசிச் சக்கரத்தின் கன்னி மூலையில் அமைந்திருப்பதால் இம்மாதத்தில் செய்யப்படும் விநாயகர் வழிபாடு கூடுதல் பலன்களைத் தரும். புரட்டாசி மாதத்தில் சுக்கிலபட்ச சதுர்த்தியில் சிவாலயங்களில் ஸ்ரீநடராஜர் பெருமானுக்கு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுவதைக் தரிசிக்கலாம்.

புரட்டாசி மாத சுக்லபட்ச திரிதியை பலராமர் அவதார தினமாகவும், சுக்லபட்ச துவாதசி அன்று வாமன ஜெயந்தி தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று லட்சுமியை இந்திரன் வணங்குவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி மலர்களால், அலங்கரித்து வழிபட்டால் சகல செல்வங்களும் வந்து சேரும்.

புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை திருப்ப ரங்குன்றம் முருகப்பெருமானின் கையில் இருந்து வேல் எடுத்து கங்கைக்கு எடுத்து செல்லும் விழா நடந்து வருகிறது.

புரட்டாசி மாத அமாவாசை தினத்தன்று பிறந்தவர்கள் ஆராய்ச்சிகள் செய்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். புரட்டாசி மாதம் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகும். அன்றைய வழிபாடுகள் மகாலட்சுமியை மகிழ்ச்சி அடையச் செய்யும்.

கல்வித் தடை, திருமணத் தடை, நோய், பணப் பிரச்சினை உள்ளவர்கள் புரட்டாசி திருவோணம் தினத்தன்று பெருமாளை வழிபட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும்.