வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

கிரகப்பிரவேச ஹோமங்கள் எவ்வாறு செய்ய வேண்டும்?

கிரகப்பிரவேச ஹோமங்கள் எவ்வாறு செய்ய வேண்டும்?

புதிதாக கட்டப்பட்ட வீட்டிலும், பழைய  வீட்டிலும், வாடகை வீட்டிலும், திருமணமான புது மாப்பிள்ளை தன் வீட்டிலேயும் கிரகபிரவேச ஹோமத்தை அவசியம் செய்ய வேண்டும்.
 
புது வீட்டை கட்டியவர் தன் மனைவிக்கு ஜாதகப்படி ஏற்ற நாளில் நல்ல முகூர்த்தத்தில் சூரிய உதயத்தில் கிரகபிரவேச ஹோமத்தை செய்ய வேண்டும்.
 
அனைத்து மங்கலப் பொருட்களுடன் பசுமாடு கன்றுடன் கன்னிப்பெண்கள், நிலைக்கண்ணாடி அனைத்தும் வேண்டும். வன்னிபொரச குச்சிகள் வேண்டும். புதுமனை அல்லது வீட்டின் வடகிழக்கு பகுதியில் கிழக்கு நோக்கி இருபத்து நாலு செங்கற்கல் சதுர குண்டம் அமைக்கவும்.
 
விடியற்காலையில் குளித்து பட்டு துணி உடுத்தி, தலைமுடித்து திலகமிட்டு சுத்தமாக வந்து வீட்டின் வெளியில் பொரச வன்னியால் அக்னி செய்து உள்ளே எடுத்து வந்து அக்னி பிரதிட்டை உத்தீர்யமான... இந்த... மந்திரத்தால் செய்யவும்.
 
அந்தணர் அனுமதியுடன் சங்கல்பம், கடப்ரதிட்டை, ஜபம், உதக சாந்தி, அக்னி சமிதாதான தேவதா ஆஜ்யபாக ஹோமங்களை நிறைவேற்றவும். அம்ருதாஹதி ஸ்வாஹா என்ற மந்திரத்தால் வன்னி பொராச சமித்தால் ஆஜ்யத்துடன் ஹோமம் செய்யவும்.
 
பிறகு நெய்யினால் வாஸ்வ்தோஷ் பதே... என்று தொடங்கும் நான்கு வித மந்திரத்தால் முக்கிய ஹோமத்தையும், மற்றவர்கள் நவகிரக ஹோமத்தையும் செய்வது வழக்கம்.
 
கடதீர்த்தம் பஞ்சகவ்யத்தால் கிரகத்தை புரோட்சித்து மங்கள தீபம், கன்னிகை, பால்குடல், கன்றுடன் கூடிய கோமாதா (பசு), திரவியம் இவற்றை வீட்டினுள் வரவழைத்து வைத்துக் கொள்ளவும்.
 
பூர்ணகும்ப ஜலத்தை மங்களா நாம்சமங்களம் சிவகுரு சிவ: என கிரகத்தை சுற்றி விட்டுவர வேண்டும். பிறகு கிரகப்ரீதிதானம், அன்னதானம், போஜனம் செய்விக்கவும். ஆரத்தி எடுத்து அந்தணர் தட்சணை கொடுத்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.