செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2017 (07:05 IST)

பெண்கள் ஹெல்மெட் அணிய மறுப்பது ஏன்? ஒரு சிறிய விளக்கம்

இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் உட்கார்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் பலர் ஹெல்மெட் அணியாமல் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பெரும்பாலான பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போதும், பின்னால் உட்கார்ந்து செல்லும்போது ஹெல்மெட் அணிவதில்லை. இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?



 


கழுத்து வலி, முடிகொட்டுதல், தலைவலி, அதிகமான வியர்வை காது கேட்காமை,. இருபுறமும் வரும் வாகனம் தெரியாது ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும். இதை எப்படி சரிசெய்வது?

* தலைக்கு சரியாக பொருந்தாத ஹெல்மெட் அணியும் நிச்சயம் தலைவலி வரத்தான் செய்யும் எனவே  சரியான ஹெல்மெட் அணிந்து அதனை தாடையோடு மாட்டியவுடன் சேர்த்து லாக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் கழுத்து வலி வராது.

* ஹெல்மெட் அணிவதற்கு முடி கொட்டுவதற்கும் சம்மந்தமே இல்லை. தலையை சுத்தமாக வைத்து பராமரித்தால் நிச்சயம் தலைமுடி கொட்டாது.

*அடிக்கடி ஹெல்மெட் போடுவதால் ஹெல்மெட்டின் பின்பகுதி அழுக்காகும். அதை முறையாக சுத்தம் செய்து அவ்வப்போது ஹெல்மெட்டின் உட்பகுதியை வெயிலில் காய வைத்தால் வியர்வை வாசனை வராது.

* ஹெல்மெட் அணியும் போது அது மிகவும் இறுக்கமாக இருந்தால்தான் தலைவலி ஏற்படும். எனவே ஹெல்மெட் வாங்கும்போது சரியாக பொருந்தக்கூடியதாக பார்த்து, ஒருமுறைக்கு இருமுறை கழுத்தில் போட்டு பார்த்து வாங்கய வேண்டும்.

* தற்போது ஹெல்மெட்டில் காற்று வருவதற்கு ஏற்ப வென்டிலேட்டர் வசதி உள்ளது. இந்த வடிவமைப்பில் காது கேட்பதற்கும் காற்று வருவதற்குமான வசதிகள் உள்ளன.

* ஹெல்மெட் அணிந்தால் இருபக்கமும் பார்க்க முடியாது என்பதை ஏற்க முடியாது. நமது இரு சக்கர வாகனத்தின் இருபுறமும் இருக்கும் கண்ணாடியின் மூலமாக பக்கவாட்டில் வரும் வாகனங்களை பார்க்கலாம்.

உயர் என்பது விலை மதிப்பில்லாதது. ஒருசில அழகு காரணங்களுக்காக ஹெல்மெட் போடாமல் உயிராமல் இழப்பது கூடாது. எனவே இருசக்கர வாகன பயணத்தின்போது பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் ஹெல்மெட் அணிந்து விலை மதிப்பில்லாத உயிரை காப்பாற்றிக்கொள்ளுங்கள்