வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (07:09 IST)

கோடை காலத்தில் புட்-பாய்சனில் இருந்து தப்பிப்பது எப்படி?

கோடை காலத்தில் பல உணவுகள் வெப்பத்தின் காரணமாக கெட்டு போய் நஞ்சாக மாறிவிடும் அபாயம் உள்ளதால் பலரும் ‘புட் பாய்சன்’ பிரச்சனையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கோடை காலத்தில் பாக்டீரியாக்கள் எளிதில் உருவாகி பரவும் காலம் என்பதால் உணவுப்பொருட்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். எனவே கோடையில் உணவுப்பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்



 


1. கோடையில் நம்முடைய வீட்டில் உள்ள பிரிட்ஜை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிலுள்ள உணவுப்பொருட்கள், காய்கறிகளில் நோயை உண்டாக்கும் கிருமிகள் பரவி, அவற்றில் நச்சுத்தன்மையை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

2. பிரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை சாப்பிடும் முன்பும், சமைக்கும் முன்பும், காய்கறிகள், பழங்களை நல்ல தண்ணீரில் நன்கு கழுவி உபயோகிக்க வேண்டும்.வ் அப்போதுதான் அதில் உள்ள கிருமிகள் தவிர்க்கப்படும்

3. சமையலறையில் பயன்படுத்தும் துணிகளை கண்டிப்பாக தினமும் துவைக்க வேண்டும். துணியில் உண்டாகும் பூஞ்சைகள், கிருமிகள் ஆகியவற்றை இதன் மூலம் தடுக்கலாம்

4. சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி உணவுகளை போன்றவற்றை பிரிட்ஜில் வைக்கும்போது கவரில் போட்டு பிரிட்ஜின் அடிப்பகுதியில் வைப்பதன் மூலம் கிருமிகள் பரவாது. இறைச்சியுடன் மற்ற உணவுகளையும், காய்கறிகளையும் சேர்த்து வைக்கவே கூடாது.

5. காய்கறிகள், இறைச்சி ஆகியவற்றை வெட்டுவதற்கு தனித்தனிப் பலகைகள் மற்றும் கத்திகளை உபயோகிக்க வேண்டும். இறைச்சியை நன்கு கழுவி சுத்தப்படுத்திய பின்பே பயன்படுத்தவேண்டும்.

இவ்வாறு சமையலிலும், சாப்பிடுவதிலும் கவனத்தோடு செயல்பட்டால் ‘புட் பாய்சன்’ பிரச்சினையில் இருந்து தப்பித்துவிடலாம்.