​விஏஓ தேர்வு பிப்ரவரி 28ஆம் தேதிக்கு மாற்றம்


Ashok| Last Modified வியாழன், 17 டிசம்பர் 2015 (17:22 IST)
கனமழையால் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணிக்கான தேர்வு பிப்ரவரி 28ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

 
 
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிசி)வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு இணைய வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான இறுதி நாள், பெருமழை மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக வரும் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி நடக்கவிருந்த கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணிக்கான தேர்வு, பிப்ரவரி 28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது 
 


இதில் மேலும் படிக்கவும் :