திங்கள், 4 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கிறித்துவம்
Written By

நீ எதை விதைகிறாயோ அதையே அறுப்பாய் - இயேசு கிறிஸ்து

மலைகளும் காடுகளும் நிறைந்த கேரளா மாநிலத்தில் மூணாறு என்ற இடத்தில் அன்று தேவராஜ் குடும்பமாக சுற்றுலா சென்றார்.
மெய் சிலிர்க்க வைக்கும் கடும் குளிரின் மாலைப்பொழுதுதில் மலை ஏறிக்கொண்டிருந்தார் தேவராஜூம், அவருடைய மகனும். அங்கே  அவருடைய மகன் திடீரென கீழ விழுந்த காயப் பட ஐய்யோ என்றான். அவனுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கும்படி மலையில் எங்கேயோ  இருந்து வந்த சத்தம் ஐய்யோ என்றது.
 
சற்று கோபமாக திரும்பி அப்பாவை பார்த்தான் அவர் இல்லை என்று புரிந்து கொண்டான்... அவரோ அவனுக்கு பட்ட காயத்தை தன் கையால் தடவிக்கொண்டிருந்தார். தன்னை ஏளனமாக சொன்ன அந்த சத்தத்திடம் உரத்த சத்தமாக நீ யார்? என்றான் 
 
அந்தகேள்விக்கு அங்கே இருந்து வந்த குரல் நீ யார்? என்றது. தந்தையோ எதுவும் தெரியாதது போல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
 
நீ என்னை ஏளனம் பண்ணுகிறாயா! என்றான். அதுவும் நீ என்னை ஏளனம் பண்ணுகிறாயா! என்ற அதே வார்த்தையை மீண்டும் சொல்ல 
 
ஏ நாயே! என்றான் அதுவும் பதிலுக்கு ஏ நாயே! என்றது. தன்னுடைய அப்பாவைப்பார்த்து இது என்ன சத்தம் அப்பா! நீங்க ஒன்றும் சொல்லவே இல்லையே இந்த சத்தம் மலையிலிருக்கும் அரக்கர்களா என்றான்?
 
அவர் சிரித்துவிட்டு அந்த சத்தத்தை நன்றாக கவனித்து பார் நல்லதை சொன்னால் அதுவும் நல்லதையே சொல்லும் என்றார். உடனே அவன்  நான் உன்னை காண ஆசையாய் இருக்கிறேன் என்றான் அதுவும் உன்னை காண ஆசையாய் இருக்கிறேன் என்றது. இவனுக்கு ஒரே  ஆச்சரியம்.
 
அது யார் அப்பா என்று மிகவும் ஆசையோடு கேட்டான். நீ எதைப்பேசுகிறாயோ அது மலையில் அப்படியே பட்டு எதிரோலியாக மீண்டும்  உனக்கு கேட்கிறது அவ்வளவு தான் வேறு யாரும் பேசவில்லை என்றார்.
 
தேவராஜ் இந்த தருணத்தை பயன்படுத்தி தன் மகனுக்கு ஒரு காரியத்தை கற்றுக் கொடுத்தார். வாழ்க்கையும் அப்படிதான் நாம் எதை பேடுகிறோமோ அல்லது எதை செய்கிறோமோ அது அப்படியோ ஏற்ற நேரத்தில் நம்மிடத்தில் திரும்பிவரும்.
 
நீ அன்பை எதிர்பார்த்தால், மற்றவர்களை நீ அதிகமாக அன்பு கூறு நீ சமாதானத்தை எதிர்பார்த்தால் மற்றவர்களோடு நீ அதிகமாக சமாதானமாக இரு. இப்படி நாம் எந்த அளவுக்கு நம்முடைய வாழ்க்கையிலிருந்து நன்மைகள் கூட்டி வழங்குகிறோமோ அந்த அளவுக்கு நமக்கு  நிச்சயமாக திருப்பி கிடைக்கும். தீமையை வழங்கும்பொழுது அதுவும் திரும்பி கிடைக்கும். நீ நன்மையை செய்தால் நன்மை உண்டாகும்.  தீமையை செய்தால் தீமை உண்டாகும்.