கிறிஸ்தவத்தில் பைபிள் கூறும் சாமுவேல் பிறப்பை அறிவோம்


Sasikala| Last Modified திங்கள், 7 டிசம்பர் 2015 (13:46 IST)
கிறிஸ்தவர்கள் புனித நூல் பைபிள். இவற்றில் குறிப்பிடப்படும் முக்கியமானவர் சாமுவேல்.  அவரின் பிறப்பைப் பற்றி அறிவோம்.

 

 
எல்கானாவுக்கு அன்னா, பெனின்னா என இரண்டு மனைவிகள்.  பெனின்னாவுக்குக் குழந்தைகள் உண்டு. ஆனால் அன்னாவுக்கோ குழந்தைப் பேறு இல்லை.
 
அதனால் அன்னா அவமானங்களையும், வெறுப்பையும், மன உளைச்சலையும் சந்திப்பது வாடிக்கை. அன்னாவும் அத்தைய ஒரு சூழலுக்கே தள்ளப்பட்டார்.
 
அன்னா ஆண்டு தோறும் சீலோ எனுமிடத்திலுள்ள ஆலயத்தில் கடவுளை வழிபட வருவார். அந்த ஆலயத்தில் ஏலி என்பவர் தலைமைக் குருவாக இருந்தார்.
 
ஒரு நாள் ஆலய முற்றத்தில் வழக்கம் போல அன்னா அழுது புலம்பி கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தார். ‘ஆண்டவரே என்னோட கஷ்டத்தைப் பார்த்து எனக்கு ஒரு ஆண் குழந்தையைக் குடுங்க. அந்த குழந்தையை வாழ்நாள் முழுதும் உங்களுக்காகவே ஒப்புக் கொடுப்பேன்’ என்று பொருத்தனை செய்து கொண்டிருந்தாள்.
 
ஏலி தூரத்திலிருந்து முற்றத்தில் தலைமைக் குரு ஏலி ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார். ஏலி தூரத்திலிருந்து கவனித்தபோது அன்னா குடிபோதையில் உளறிக் கொண்டிருப்பது போல அவருக்கு தோன்றியது.
 
அங்கு வந்த ஏலி (குரு) எவ்வளவு காலம் தான் நீ குடிகாரியாய் இருப்பாய்? குடிக்கிறதை நிறுத்து என்றார் அவர்.
 
அன்னா பதறினார், ஐயோ நான் குடிகாரியல்ல. மனம் நொந்து போய் ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருக்கிறேன் என்றார்.
 
ஏலி மனம் வருந்தினார். கவலைப்படாதே, உன் விண்ணப்பத்தை கடவுள் கேட்டருள்வார் என்றார்.
 
அன்னாவின் வேண்டுதல் கேட்கப்பட்டது. குழந்தைகளே இல்லாத அன்னாளுக்கும், எல்கானாவுக்கும் ஒரு அழகான மகன் பிறந்தான். அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டார்கள்.
 
சாம்வேல் சிறுவனாகி பால்குடி மறந்ததும் அவனைத் தூக்கிக் கொண்டு அன்னா ஆலயத்துக்கு வந்தாள்.
 
குருவே... அன்று குடிபோதையில் உளறுவதைப் போல பேசிய பெண் நானே. இந்தக் குழந்தைக்காகக்தான் அப்படி வேண்டினேன்.
 
அன்னா இவ்வாறு கூறினாள்: இவன் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கே அர்ப்பணிக்கப் பட்டவன் என்றாள். அன்னாவின் வாழ்க்கை சில விஷயங்களைக் கற்றுத் தருகிறது.
 
முதலாவது, தளராத விசுவாசம், அன்னா பிராத்தனையில் இருந்து பின் வாங்கவில்லை. 
 
இறைவனை முதன்மை படுத்தும் போதுதான் விண்ணப்பங்கள் விரைவாய் அங்கீகரிக்கப்படுகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :