வியாழன், 2 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. நம்பினால் நம்புங்கள்
  3. கட்டுரை
Written By Sasikala

ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு தெரியுமா...!

கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் மட்டுமே உள்ளது. நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன்  உண்டு.  நள்ளிரவில் ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு  கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.

 
 
கனவில் யானை வந்தால் அரசாங்க உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்கும். யானை  மாலை போடுவது போல் கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். 
 
ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். வயதில் மூத்தவர்கள் தன்னை ஆசிர்வாதம்  செய்வது போன்று கனவு கண்டால் ஜீவன மேன்மையும் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.
 
எலுமிச்சை பழத்தைக் காண்பது நல்லது, தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் திழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும்  பெருகும்.
 
திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு  செல்வம் வந்து சேரும்.
 
இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம், பதவி,  லாபம் நிச்சயம் கூடி வரும்.
 
சிறு குழந்தைகளை கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள்  கூடும். தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
 
திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நம்மதிப்பு உயரும். தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு  கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.