ஸ்ரீ வாதாபி விநாயகர் -ஸ்தல வரலாறு
இட விபரம் அடையும் வழிகள் :
திருச்செங்காட்டங்குடி தலம் நாகை காயிதே மில்லத் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. நன்னிலம் புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கே 9 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலையத்திலிருந்து ( 6 கிலோ மீட்டர் ) திருப்புகலூரை அடைந்து தெற்கே உள்ள முடிகொண்டான் ஆற்றை கடந்து திருக்கண்ணபுரம் ( 1௧/2 கி.மீட்டர் ) சென்று ; அங்கிருந்து கிழக்கே ( 1௧/2 கி.மீட்டர் ) சென்றால் இவ்வூரை அடையலாம்.
இறைவன் பெயர் :
அருள்மிகு கணபதீச்சரம்
அருள்மிகு உத்தராபதீஸ்வரர் ( சிறுத்தொண்டருக்கு அருள்புரிய எழுந்தருளிய பைரவ வேட திருவுருவம். )
இறைவி பெயர் :
அருள்மிகு வாய்த்த திருகுழல் உமை நங்கை.
தலப் பெருமைகள்
இத்திருக்கோயில் மிகத் தொன்மையானது. முதலாம் இராசராசன் காலத்து கல்வெட்டுகள் இருப்பதே இதன் தொன்மைக்கு சான்று பகர்கிறது. சமயக்குறவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் வழிபடப் பெற்று அவர்கள் அருளிய மூன்று பதிகங்கள் உள்ளன. திருஞானசம்பந்தர் திருமருகலையும், இத்தலத்தையும் இணைத்து ஒரு பதிகம் அருளியுள்ளார். இவற்றிலிருந்து இத்திருக்கோயில் கி.பி. 6 அல்லது 7ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே வழிபடப் பெற்றமை அறியப்படும்.