திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2024 (06:01 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்! – இன்றைய ராசி பலன்கள்(01.04.2024)!

astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 



மேஷம்:
இன்று தொழில் வியாபாரம் மந்த நிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள்  மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

ரிஷபம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கவனமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

மிதுனம்:
இன்று பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

கடகம்:
இன்று பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள். மன அமைதி கிடைக்கும். காரிய தடைகள் விலகும். கடமை உணர்வுடன் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

சிம்மம்:
இன்று விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கன்னி:
இன்று எதிர்பாலினரால் காரிய  அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள்  வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

துலாம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

விருச்சிகம்:
இன்று கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

தனுசு:
இன்று உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நன்மை தரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

மகரம்:
இன்று வீண் அலைச்சல் குறையும். காரிய தடைகள் நீங்கும். எல்லாவகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கும்பம்:
இன்று எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாச பயணங்களும்  செல்ல நேரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

மீனம்:
இன்று முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7