1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (06:01 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு பேச்சுவார்த்தையில் கவனம் தேவை! – இன்றைய ராசி பலன்கள்(13.02.2024)!

astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்
இன்று உங்கள் பிரச்சனைக்கு முடிவெடுக்க முற்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும். அதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். நீங்கள் தெளிவாக இருந்தாலே நல்லது நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 7

ரிஷபம்
இன்று நீங்கள் உங்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணருவீர்கள். குடும்ப மகிழ்ச்சிக்காக உங்கள் மனதை மாற்றிக் கொள்ள முற்படுவீர்கள். இழந்த பெருமையை மீட்டுக் கொள்ளும் புத்திசாதுர்யம் உங்களுக்கு உண்டு. ஆனால் வீட்டில் உங்கள் நிம்மதி குறையும் நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 5

மிதுனம் 
இன்று தொழில் செய்யும் இடம் மற்றும் வியாபார தலங்களில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். எனினும் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். வார்த்தைகளை கோர்த்துப் போட்டு பேசுவது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருநீலம்
அதிர்ஷ்ட எண்: 5

கடகம்  
இன்று உடல் ஆரோக்யம்   ஓரளவு சீராக இருந்தாலும் அவ்வப்போது வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு ஆட்பட நேரிடலாம். மேலும் சிலருக்கு பித்தப்பை தொடர்பாக   மருத்துவச் செலவுகளும் ஏற்படும். உங்களின் பேச்சினால் பகையை சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஊதா
அதிர்ஷ்ட எண்: 2, 3

சிம்மம்
இன்று முக்கியமான   விஷயங்களில் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள், அறிவுரைகளைக் கேட்டு முடிவெடுப்பீர்கள். நண்பர்களுக்கும், கூட்டாளிகளுக்கும்   உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறுகளை உடனடியாகச் சுட்டிக்காட்டி திருத்துவீர்கள்.  
அதிர்ஷ்ட நிறம்: வயலட், வெண்பட்டு
அதிர்ஷ்ட எண்: 1,2

கன்னி
இன்று சுதந்திரமாகப் பணியாற்றி வெற்றிவாகை சூடுவீர்கள். புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். மன தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும்.   குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் ஒன்று சேர்வார்கள். வருமானம் படிப்படியாக உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், கரும்பச்சை
அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்
இன்று பழைய கடன்களைத்   திருப்பிச் செலுத்துவீர்கள். கடினமான உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்களின் போட்டியாளர்களை திடமான நம்பிக்கையுடன்   வெற்றிகொள்வீர்கள். நூதனத் தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். உங்களின் செயல்களில் வேகத்துடன், விவேகத்தையும்   கூட்டிக்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 6

விருச்சிகம்
இன்று உங்களுக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக்கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அவதூறு   வழக்குகளை சம்பந்தப்பட்டவர்களே திரும்பப் பெறுவார்கள்.  பெரியோரை மதித்து அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். புதிய தொழில் நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள்.  
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர்பச்சை
அதிர்ஷ்ட எண்: 2, 9

தனுசு
இன்று சிலருக்கு விருது, பட்டம் பெறும் யோகம் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களையும் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகும். புதிய   சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். நகைச்சுவையுடன் பேசி பிறரைக் கவர்வீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9,3

மகரம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள்.   போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற   சுபகாரியங்கள் நடக்கும். உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6

கும்பம்
இன்று எவருக்கும் உங்கள் பெயரில் பணம்   வாங்கித் தர வேண்டாம். மேலும் அவசியமான பயணங்களையே மேற்கொள்ளவும். புதிய நண்பர்களை ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம்.   பொதுக்காரியங்களில் ஈடுபட மனம் விழையும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்
இன்று ரியல் எஸ்டேட்   துறைகளின் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில்  சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 7