1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2024 (06:01 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதாரம் மேம்படும்! – இன்றைய ராசி பலன்கள்(07.02.2024)!

astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்:
இன்று கணவன்-மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடப்பதும் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வதும் நல்லது. நினைத்த காரியங்கள் நிறைவேறும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

ரிஷபம்
இன்று பணிபுரியும் பெண்கள் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த கௌரவமான பதவிகள் கிடைக்கும். தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக அமைந்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்
இன்று எல்லாவகையிலும் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீனமுறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசுவழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் -உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கடகம்
இன்று உங்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு கதாபாத்திரங்கள் அமையும். தடைப்பட்ட சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் சாதகமான பலன்களையும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

சிம்மம்
இன்று கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். கடந்தகால மந்தநிலைகள் விலகும். நண்பர்களின் உதவி தக்கசமயத்தில் கிடைக்கும். அரசுவழியில் ஆதரவுகள் உண்டாகும். விளையாட்டுப் போட்டி, கட்டுரை, கவிதை போன்றவற்றில் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள். சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கன்னி
இன்று தடைகள் விலகும். வீண்விரயங்கள் குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மனமகிழ்ச்சி அளிக்கும். புத்திரவழியில் பூரிப்பு, கணவன்-மனைவியிடையே ஒற்றுமை போன்ற யாவும் மிகச்சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

துலாம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை, புதிய பொருட்சேர்க்கைகள், ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் யாவும் சிறப்பாக இருக்கும். உற்றார்-உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கொடுக்கல்-வாங்கலில்  நல்ல லாபத்தினை எதிர்பார்க்கலாம். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறமுடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

விருச்சிகம்
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபமும் அபிவிருத்தியும் பெருகும். போட்டி, பொறாமைகள் குறையும். அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ் உயரும். மக்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு பொருளாதார நிலை மேன்மையடையும். கடன்கள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

தனுசு
இன்று பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைந்து எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் கொடுத்த நேரத்தில் காப்பாற்றமுடியும். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கக்கூடிய வாய்ப்புகள்கூட உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மகரம்
இன்று எதிர்பாராத திடீர் தனவரவுகள் உங்களைத் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் திருப்தியான நிலை நிலவும். எதிர்பார்க்கும் உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு, இடமாற்றம் யாவும் சிறப்பாக அமையும். தொழில், வியாபார ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் எதிர்பார்க்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

கும்பம்
இன்று கலைஞர்களுக்கு வாய்ப்புக்கள் தேடிவரும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக அமையும். கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்புடன் செய்து முடிக்கமுடியும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலனை அடைவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவும், உதவியும் தேடிவரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7