இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 17/09/2020
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
1. கன்னி:
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு மனதில் குழப்பம் அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தர சற்று கடுமையான முயற்சி அவசியம். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம்.
2. துலாம்:
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
3. விருச்சிகம்:
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும்.
4. தனுசு:
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. வீண்கவலையை தவிர்ப்பது நல்லது. எல்லா கஷ்டங்களும் நீங்க சற்று போராடவேண்டி இருக்கும்.
5. மகரம்:
இன்று மகர ராசிக்காரர்களுக்கு மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். தொழில் வியபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும்.
6. கும்பம்:
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.