செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 29 மே 2021 (05:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (29-05-2021)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை. அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 

ரிஷபம்:
இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.  வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன்  சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும்.  கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.  எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவை சேமிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

மிதுனம்:
இன்று மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.  வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 9

கடகம்:
இன்று வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம். கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 

சிம்மம்:
இன்று பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.  எதிலும் லாபம் கிடைக்கும். மனத்தெம்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், ப்ரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி:
இன்று வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும்.  உங்கள் வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மீக எண்ணம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9

துலாம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற  சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். மனோதைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9 

விருச்சிகம்:
இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6 

தனுசு:
இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதமானாலும் நல்லவேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும்.  அவர்களது  முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்:
இன்று கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும்.  பணவரத்து கூடும்.  எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும்  சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கும்பம்:
இன்று வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். சோம்பலும் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, இளமஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 9 

மீனம்:
இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல் சற்று மந்தமாக காணப்படும்.  பணவரத்து தாமதமாகும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  உழைப்பு அதிகமாகும். முயற்சிகள் பயன்தராமல் போகலாம். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3