1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (05:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (30-06-2018)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று உற்றார்-உறவினர்களிடமும், கணவன்வழி உறவுகளிடமும் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் தேடிவரும். வீடு, மனை வாங்கும் யோகம் அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

ரிஷபம்:
இன்று  பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். முயற்சிகளில் எந்தவொரு தடையும் இல்லாமல் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த தலைமைப் பதவிகளும் கிடைக்கும். புகழின் உச்சிக்கே செல்வீர்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். மக்களின் ஆதரவு பெருகும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்:
இன்று சகலவிதத்திலும் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப்பெறுவதால் லாபங்கள் பெருகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பூமி, மனை வாங்கும் யோகமும் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கடகம்:
இன்று குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும். உங்களை வேண்டாம் என புறக்கணித்தவர்களும் வாய்ப்புகளை வாரி வழங்குவார்கள். நீங்கள் நடித்த படங்களும் வசூலில் முதலிடம் வகிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்:
இன்று போட்டி பொறாமைகள் விலகும். தடைப்பட்ட பணவரவுகளும் தடைகள் நீங்கி கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.மாணவ- மாணவிகள் கல்வியில் திறம்படச் செயல்பட்டு மதிப்பெண்களைச் சிறப்பாகப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி:
இன்று  மேற்கல்வியிலும் புதிய சாதனைகள் செய்யும் வாய்ப்பு அமையும். விளையாட்டுத்துறைகளிலும் மாகாண அளவில் வெற்றி பெற்று தங்கள் பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்:
இன்று எதிர்பாராத திடீர் தனவரவுகள்கூட உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பழைய கடன்கள் யாவும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சிலருக்கு சிறப்பான புத்திரபாக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்:
இன்று  உடன்பிறப்புகளால் சாதகமான பலனை அடைவீர்கள். அண்டைஅயலாரின் ஆதரவுகள் தக்கசமயத்தில் அமையும். புதிய பொருட்சேர்க்கைகளும், ஆடை ஆபரணமும் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் தொழிலை அபிவிருத்திச்செய்ய பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

தனுசு:
இன்று எதிர்பார்த்த லாபங்களும் கிடைப்பதால் முதலாளி -தொழிலாளிகளிடையே இருந்த வேற்றுமைகள் மறையும். கலைஞர்களுக்கு கைநழுவிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். அரசியல்வாதிகளுக்கு அமைச்சர்களிட மிருந்து பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்:
இன்று உடல் ஆரோக்கியம் மிகச்சிறப்பாக இருக்கும்.  பணவரவில் இருந்த தடைகள் விலகி வாழ்வில் முன்னேற்றமான நிலை உண்டாகும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சினைகளும், மனக்கவலைகளும் மறைந்து மனநிம்மதி ஏற்படும். ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்வது உத்தமம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கும்பம்:
இன்று நீங்கள் திட்டமிட்ட காரியத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும். கணவன்-மனைவி உறவு மிகவும் திருப்திகரமாக இருக்கும். பெரியவர்களின் ஆசியும் மனதிற்கு சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். தெய்வீக, ஆன்மிக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மீனம்:
இன்று குடும்பத்தில் புத்திரவழியில் பூரிப்புகள் தரக்கூடிய இனிய சம்பவங்களும் நடைபெறும். தொழில், வியாபார ரீதியாக எதிர்பாராத லாபங்களைப் பெறுவீர்கள். கூட்டாளிகளிடம் சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6