1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala

வாஸ்து குறைபாட்டை நீக்கும் முதற்படை வீடான திருப்பரங்குன்றம்!!

மதுரையில் இருந்து திருநெல்வேலி செல்லும் பாதையில் அமைந்துள்ளது. குடவரைக் கோயில் அழகன் முருகன் அன்னை தெய்வானையைக் கைத்தலம் பற்றிய அற்புதமான கலைக் கருவூல ஆலயம்.


 
 
வடக்கில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் படிக்ககட்டுகளில் ஏறினால் அற்புதமான கலைநயம் கொண்டே சென்று முருகனை தரிசிக்கலாம். இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
 
ஆனைமுகன், துர்க்கை, தந்தை சிவன், பெருமாள் ஆகியோருடன் காலை மடித்து அமர்ந்த நிலையில் காட்சி தருகிறான். மெய்சிலிர்க்க காட்சி தரும் இறைவன் சோதிடக் கலைக்கு முதல் நூல் இயற்றியவன். அதன் அங்கமான வாஸ்து கலைக்கு இங்கு உயிரோட்டம் கொடுக்கிறான்.
 
வானுயர்ந்த வடக்கு நோக்கிய ஆலயத்துக்கு தெற்கில் நெடிதூயர்ந்த குன்று, வடக்கில் இருந்து வரும் ஈசானிய தெருத்தாக்கம் ஆலயத்துள், இறைவன் சன்னதிக்கு ஈசானியத்தில் குளம். எனவே வழிபடும் மக்கள் கூட்டம் அதிகம். வாஸ்து பலம் குறைந்த வீடுகளில் வாழும் மக்கள் இங்கு வந்து வழிபடுவது வீட்டின் வாஸ்து குறைப்பாட்டை நீக்கும்.