1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala

சகல சௌபாக்கியங்களையும் அள்ளித்தரும் வரலட்சுமி விரதம்

சகல சௌபாக்கியங்களையும் அள்ளித்தரும் வரலட்சுமி விரதம்

வரலட்சுமி நோன்பும் ஆடி மாதம் பெளர்ணமிக்கு முன்வரும் வெள்ளியன்று வரும். இதுவும் பெண்கள் மிகவும் போற்றி வழிபடும் ஒரு பண்டிகை.


 



வீட்டில் சௌகர்யங்கள் பெருகவும், இல்லத்தரசிக்கு மாங்கல்ய பலம் கூடவும் பெண்கள் மேற்கொள்ளும் நோன்பு இது. வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று பூஜை செய்து உபசரித்தாள் அவள் அருள் கிடைக்கும். இந்தக் கிழமைகளில் கோவில்களில் திருவிளக்குப் பூஜையும் நடைபெறும். நாகதேவதைக்குப் பால் தெளித்து விசேஷ பூஜையும் செய்வார்கள்.
 
வரலட்சுமி விரதத்தை கன்னிப்பெண்களும், நோற்பது மிகவும் விசேஷமாகும். இந்த விரதத்திற்கு ஒரு புராண வரலாறு உண்டு. ஸ்ரீபரமேஸ்வரனும், பார்வதி தேவியும், கயிலை மலையில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
 
அவர்களது ஆட்டத்திற்கு நடுவராக சித்திரநேமி என்பவன் நியமிக்கப்பட்டிருந்தான். அவன் நியதி தவறி பரமேசுவரன் பக்கமாகவே பேசினான். நடுநிலை தவறிய சித்திரநேமியின் செயல் தேவிக்கு கோபத்தை உண்டாக்கியது. சங்கரி சினங்கொண்டாள். சித்ரநேமியை சபித்தாள். அவன் தேவியின் சாபத்தால் பெருநோய் பிடிக்கப்பட்டான்.
 
சித்ரேநாமி, வரலட்சுமி விரதம் அனுஷ்டித்து நோய் நீங்கியது கண்டு சங்கரி மகிழ்ச்சியடந்தாள்.  வரலட்சுமி மகிமை அனைவரும் அறியும் வண்ணம் தேவரீர் திருவாய் மலர்ந்து அருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார். 
 
வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.
 
பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.
 
இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்