சத்குருவின் பார்வையில் டெல்லி பலாத்காரம்!

FILE

தண்டனை கொடுத்தால், குற்றம் இல்லாமல் செய்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அதிக முன்யோசனையோடு சாதுர்யமாக குற்றங்களை செய்யத் துவங்குவார்கள். அதிக முன்யோசனை தேவைப்படுவதால், குற்றத்தின் எண்ணிக்கை வேண்டுமானால் சற்றுக் குறையலாம். ஆனால் இப்படிப்பட்ட எண்ணங்கள் மனதில் சதா ஓடிக் கொண்டே இருக்கும்போது, எப்போது வாய்ப்புக் கிடைக்கிறதோ, அப்போது இது நிஜத்தில் அரங்கேறும் என்பது மட்டும் நிச்சயம்.

ஒரு கட்டாயம் பல கட்டாயங்களுக்கு மூலமாகிறது!

ஒரு பெண்ணையோ ஆணையோ அல்லது ஒரு குழந்தையையோ கட்டாயத்திற்கு உள்ளாக்கி அவர்களுக்கு எதிராக செய்யும் ஒரு செயல், வன்முறைக்கும் குற்றத்திற்கும் சமம். கட்டாயத்தின் பேரில் செய்யப்படும் செயலுக்கு இன்று நாம் உடன்படுகிறோம் என்றால், அதிலிருந்து நிச்சயமாக இன்னொன்று முளைக்கும். நம் வீட்டிலிருந்துதான் இது துவங்குகிறது.

ஒரு குழந்தையை நீங்கள் கட்டாயப்படுத்தி உணவு உண்ணச் செய்ய முடியும் என்றால், நாளைக்கே கட்டாயப்படுத்தி பாலியல் குற்றமும் செய்ய முடியும்தானே? குற்றங்கள் இப்படித்தான் துவங்குகின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்குத் தீர்வு?

குற்றவாளிகள் எல்லாம் வேற்று கிரகங்களில் இருந்து குதித்தவர்கள் அல்ல. இன்னும் சொல்வதென்றால், நீங்கள் தினமும் இவர்களுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இவர்கள் உங்கள் பிள்ளைகள், கணவன்மார்கள், அண்ணன்கள், தம்பிகள்தான். இவர்கள் மிக நல்லவர்களாக இருக்கலாம், ஆனால் யாரும் இவர்களை கவனிக்காத பட்சத்தில், முற்றிலும் வேறுவிதமாக இவர்கள் செயல்படக் கூடும்.

இது மாற வேண்டும் என்றால், இதற்கு தனி மனித மாற்றம் மிக மிக முக்கியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதில் நேரமும், முயற்சியும் செலவிடத் தயங்கினால், இன்றிருக்கும் நிலையை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். காலப் போக்கில், இதை விட மோசமான சூழ்நிலைகளையும் கூட சந்திக்கும் நிலை ஏற்படும். 'நீங்கள் யார்' என்பதை உங்களை‌சுற்றி இருப்பவர்களோ, அவர்களின் மதிப்பீடுகளோ, அபிப்பிராயங்களோ முடிவு செய்யக் கூடாது. ஒவ்வொரு குழந்தையும் இப்படிபட்ட சூழ்நிலையில் வளரும் வாய்ப்பை பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அதுமட்டுமின்றி யாரையும் பிரித்துப் பார்க்காமல் அனைவரையும் சேர்த்துக் கொள்ளும் உணர்வோடு குழந்தைகள் வளர வேண்டும்.

இந்த தனி மனித மாற்றத்தை ஆன்மீகம் உண்டாக்குகிறது. உடலையும் தாண்டிய பரிமாணங்கள் வாழ்வில் இருப்பதை ஆன்மீகம் நமக்குத் திறந்து காட்டுகிறது. அதனால் உடல் தாண்டிய பரிமாணத்தை உணர்வதே இதற்கான ஒரே தீர்வு.
Webdunia|
பலரின் எண்ணத்தில், பெண் என்றாலே சில உடல் அங்கங்கள்தான். மார்பு, தொப்புள், உடல் வளைவுகள், நீள முடி... இவையெல்லாம் சேர்ந்ததுதான் ஒரு பெண் என்கிற எண்ணம் பலர் மனதில் உரக்க ஒலிக்கிறது. ஒரு பெண், வெறும் உடல் அங்கங்களின் சேர்க்கையாக உங்கள் எண்ணத்தில் வியாபித்திருப்பது ஏன்? இது ஆண்களிடம் மட்டும்தான் காணப்படுகிறது என்றில்லை. பெண்களும் அப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இக்குற்றத்திற்கு தண்டனை வேலை செய்யுமா?மக்களின் கவனமும், புரிதலும் உடல் சார்ந்ததாக இருப்பதுதான் இப்பொழுது இருக்கும் அடிப்படை பிரச்சனையே. நம்முடைய புரிதலும் உணர்தலும் கொஞ்சமாவது இந்த உடலைத் தாண்டி செல்லும் என்றால் இது போன்ற அசம்பாவிதங்கள் குறைந்துவிடும். குற்றம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், தண்டனை மூலமாக குற்றத்தை கட்டுப்படுத்துவது முடியாத காரியம். 10 - 20 சதவிகித மக்கள் குற்றம் செய்கிறார்கள், அவர்கள் அத்தனை பேரையும் தண்டிப்பது நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம். ஒரே ஒரு சதவிகித மக்கள் மட்டும் குற்றம் செய்தால், அவர்களுக்கு தண்டனை கொடுத்து நிலைமையை சரி செய்யலாம். ஆனால் 20 சதவிகித மக்களை தூக்கிலிட வேண்டுமா என்ன? அப்படிச் செய்தால் அது பாலியல் பலாத்காரத்தை விட கொடியதாகிப் போகும்.


இதில் மேலும் படிக்கவும் :