ஈஷாவுடன் திருக்கயிலாயம் - 4

WD

நான் ஒரு சுற்றுலா வழிகாட்டியாக உங்களோடு இருக்கவில்லை. வேறு சில சாத்தியங்களை நம்மால் உருவாக்க முடியும் என்பதால் இங்கே இருக்கிறோம். சாதாரண சீதோஷ்ணத்தில் நீங்கள் உருக மாட்டேன் என்கிறீர்கள். அதனால்தான் இப்படிப்பட்ட இடத்துக்கு கூட்டி வந்து உருகவைக்க நினைத்தேன்.

ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிற கதைகளை ஆழமாகப் பார்த்தால், அவை இந்த இடத்தில் நிரப்பப்பட்டுள்ள சக்தியைப் பற்றியும் அதன் தன்மையைப்பற்றியதாகவும் இருக்கும். இவையெல்லாம் பக்தர்களால் சொல்லப்பட்டவை. அவர்களுக்கு மிகைப்படுத்திப் பார்க்கவோ, பேசவோ தயக்கமே இருப்பதில்லை. அதை விரும்புபவர்கள் அவர்கள். எனவே எல்லாமே ஒரு எல்லைக்கு மேல்தான் இருக்கும். பரவாயில்லை, அப்படியே விடுங்கள். எல்லாவற்றையும் உங்கள் தர்க்க அறிவில் போட்டு அரைத்துப் பார்த்து கொன்று போட வேண்டாம். கதைக்கு வருவோம். காஷ்மீர சைவ வழியில் சொல்லப்பட்ட ஒரு கதை மிகவும் பிரபலம்.

ஒரு நாள் சிவா தன் நண்பர்களுடன் வெளியே சென்றார். நண்பர்கள் யாரென்று தெரியும் அல்லவா? துர்தேவதைகள், பேய்கள், பிசாசுகள் எல்லாம் அவர் நண்பர்கள். சிவா தன் நண்பர்களுடன் வெளியே சென்று விட்டதால், குளிப்பதற்காக மானசரோவர் செல்லலாம் என்று பார்வதி நினைத்தாள். கீழே வந்து மானசரோவரில் மூழ்கிக் குளித்து எழுந்தாள். அன்று சூரியனும் தலைகாட்டியதால் உடலை உலர்த்த, ஆடைகள் அணியாமல் அங்கேயே படுத்துக் கொண்டாள். மது அருந்தியிருந்த சிவா, அந்த நேரம் பார்த்து அங்கே வந்தார். அங்கே படுத்திருந்தது பார்வதி என்பதை அறியவில்லை. அவளது மார்பகத்தைப் பார்த்தவர், அதை ஒரு லிங்கமெனக் கருதி வழிபடத் தொடங்கினார். சிவனின் பார்வையில் லிங்கமாய் தெரிந்த பார்வதியின் ஒருபுற மார்பகம், அவரது வழிபாட்டால் கைலாஷ் மலையாய் உயர்ந்ததாகச் சொல்கிறார்கள்.

அது உண்மைதான். கைலாஷ் மலையைப் பார்த்தால் அது இந்த மலைப்பகுதியின் தொடர்ச்சியாய்த் தெரியவில்லை. இப்படி ஒரு கதை சொல்லப்பட்டது ஏன் தெரியுமா? காஷ்மீர சைவ வழியினர் இங்கே நீண்ட காலம் தங்கியிருந்து பெண்மை சார்ந்த விஷயங்களைச் செய்திருக்கிறார்கள்.

தாந்த்ரீக வழியில் இருந்த இவர்கள் பெண் தெய்வங்களைச் சார்ந்த ஆன்மிக வழிக்கு உரியவர்கள். கைலாஷ் மலையில் பெரும் ஆன்மிகப் பணியினை இவர்கள் செய்திருக்கிறார்கள். அதுதான் என்னை இங்கே வரத் தூண்டியது. பெண்மைச்சக்தி நிரம்பிய இடம் இது. புத்த மதத்தினர்கூட இதனை ‘தாயின் கருணை’ என்றே அழைக்கிறார்கள்.

எனவே நாம் செல்லும்போது, அந்த பரிமாணத்தை உணர்கிற தன்மையில் செல்லலாம். அதைப் பெறுகிற நிலைக்கு ஒருவர் தயாராக வேண்டும். கைலாஷை நெருங்க நெருங்க நாம் அதை ஆழப்படுத்துவோம்! ’’

மீண்டும் அடுத்வாரமபயணிப்போம்...
Webdunia|
ஆழ்ந்த பக்தி உணர்வோடும், மரியாதையுடனும், இந்த புனித மண்ணின் மீது அழுக்கேறிய பூட்ஸ் காலுடன் நடக்கிறோமே என்ற ஆழமான மனவலியுடனும் செல்லுங்கள். அப்படி இருந்தால் உங்களுக்குள் இருப்பது உயிர்ப்பாய் இருக்கும். உச்சபட்ச உண்மை நெருங்கி வரும். உங்களைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருந்தால், உச்சபட்ச உண்மைக்கு வெகுதொலைவில்தான் இருப்பீர்கள்.


இதில் மேலும் படிக்கவும் :