ஈஷாவுடன் திருக்கயிலாயம் - 4

WD

சீதோஷ்ண நிலைக்கேற்ப உடலைப் பராமரிப்பது குறித்தும், மாமலையின் மகத்துவத்தையும், மலையாய் விரிந்திருந்த அந்த இறைமையின் தன்மைக்குள் எங்களை இணைத்துக்கொள்வது குறித்தும் சத்குரு விரிவாய் பேசினார்.

“புத்த மதத்தினர் பிரபஞ்சத்தின் மையப் புள்ளியாக கைலாஷ் மலையைப் பார்க்கிறார்கள். படைப்புகளுக்கு எல்லாம் அடிப்படையான சக்தி என்பதாக இதனைச் சொல்கிறார்கள். யோக வழியில் முதுகுத் தண்டை பிரபஞ்சத்தின் மையமாக வர்ணிக்கிறோம்.

கைலாஷ் மானசரோவர் பற்றி நிறையக் கதைகள் உண்டு. யாராவது அங்கே சென்றால், திரும்பி வர மாட்டார்கள் என்று பேசப்படுவதுண்டு. ஆமாம் அப்படி நடந்திருப்பது உண்மைதான். ஆனாலும் பத்தாயிரம் வருடங்களாக மனிதர்கள் அங்கே போய் வருகிறார்கள் என்பதும் உண்மை. ஒருவர், இருவர் அல்ல, கோடிக் கணக்கான வர்கள் போய் வருகிறார்கள்.

எல்லா இடங்களிலும் ஒரு சிலர் இறக்கத்தான் செய்கிறார்கள். சில இடங்களில் வாழ்க்கை, மரணம் இரண்டுக்கும் இடையிலான எல்லைக்கோட்டின் அளவு சிறிது குறைந்துள்ளது. ஆன்மிகரீதியாக அது நல்லதுதான். ஏனென்றால், ஒருவர் தன் மரணம் குறித்து தீவிர விழிப்பு கொள்ளும் போதுதான், பொருள் நிலை இல்லாத ஒன்றைக் குறித்து விழிப்படைகிறார். எனவே கைலாஷ் மலை ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.
WD

சீதோஷ்ணம் மற்றும் வேறுபல அம்சங்கள்கொண்ட இடங்களுக்குச் செல்வதால், வாழ்க்கை - மரணம் இடையே உள்ள எல்லைக்கோடு குறைகிறது. ஆனால் விவேகத்துடன் நடையிட்டால், நடப்பதற்குப் போதுமான அளவு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம். முட்டாள்தனமாய் நடந்துகொண்டால் எங்கே போனாலும் நமது உயிர் பறிக்கப்பட்டுவிடும் இல்லையா?

எனவே, ‘என்ன ஆகுமோ, என்ன ஆகுமோ?’ என நடுங்குவது முட்டாள்தனம். பிரமாண்டமாய் சக்தியூட்டப்பட்ட இடத்துக்கு, ஆன்மிகம் தீவிரமாய் நிரம்பியுள்ள இடத்துக்குச் செல்லும்போது ‘நான் பிழைப்பேனா, மாட்டேனா’ என்று எண்ணத்தை ஓட்டாமல் இருங்கள். அது முறையல்ல!

உங்களைப்பற்றி முக்கியத்துவம் இல்லாமல் செல்ல வேண்டும். உங்களை முக்கியப்படுத்தும் போதெல்லாம் வாழ்வின் மற்ற அம்சங்கள் சிக்கலாகின்றன. கைலாஷ், ஈசனின் இருப்பிடம். அங்கே நீங்களா முக்கியம்?
Webdunia|
திபெத்நாங்கள், சாகா என்ற இடத்தை வந்தடைந்தோம். அங்கே மலைகள் பலவிதங்களில் இருப்பதைக் கண்டு ரசித்தோம். பசுமையே இல்லாமல் பாறைகளாய்... மண்வண்ணமாய்... பாதி பசுமையும் மீதி பனியும் மூடிய முகடுகளாய்... முற்றிலும் பனி மூடியதாய் என எல்லாமே பிரமாண்டம்.


இதில் மேலும் படிக்கவும் :