வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Caston
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2017 (12:15 IST)

குச்சி மிட்டாய் போன்ற நாம் மறந்து கடந்த நம்ம ஊரு பண்டங்களை தீபாவளிக்கு ருசிக்க ஒரு வாய்ப்பு

குச்சி மிட்டாய் போன்ற நாம் மறந்து கடந்த நம்ம ஊரு பண்டங்களை தீபாவளிக்கு ருசிக்க ஒரு வாய்ப்பு

பேர் உவகைப் பெட்டகம் கேட்க மிகவும் வித்தியாசமாக இருந்தாலும் நாம் அன்றாட பயன்படுத்தும் சொல்லாடல்தான்.  பெயரில் மட்டும் இல்லாது உண்மையான உவகையைத் தரும் விதமாக நாவூறும் நம் பாரம்பரிய பண்டைய காலத்துப் பண்டங்களைக் கொண்டு ஒரு ஸ்பெஷல் ஸ்வீட் பாக்சினை அறிமுகம் செய்திருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையம்.


 
 
நெல்லை கருப்பட்டி நெய் மைசூர்பாக், திருநெல்வேலி நெய் அல்வா, தூத்துக்குடி குச்சி மிட்டாய், திருவில்லிபுத்தூர் பால்கோவா, கேரளா பழம் சிப்ஸ், முராரி அஜ்மீர் கேக் என தமிழகத்தின் மிகச்சிறந்த தரமான இனிப்புகளை தங்கள் பேர் உகவைப் பெட்டியாக ஹோம் டெலிவரி செய்கிறார்கள். ஒரே பெட்டியில் தமிழகத்தின் அனைத்து ரக இனிப்புகளையும் ருசித்து விடலாம்.


 
 
வெளிநாடுகளில் பணி புரிந்து நம்ம ஊர் பாரம்பரியத்தின் முக்கியம் உணர்ந்து தங்கள் வேலையினை விடுத்து பாரம்பரியப் பண்டங்களை சந்தைப்படுத்தும் சிறப்பானதொரு முயற்சியில் ஈடுபாட்டுடன் செயலாற்றுகிறார்கள். இவர்களின் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் இதுபோன்று இலந்தை அடை துவங்கி மணப்பாறை முறுக்கு வரை அனைத்து பாரம்பரிய பண்டங்களும் உண்டு.


 
 
ஒவ்வொரு பொருளும் மிகவும் கவனத்துடன் அதன் தனித்துவமான ருசி மாறாது ஆர்டர் செய்பவரின் கைகளில் சேர்க்கப்படுகிறது. சென்னை, பெங்களூர்  மற்றும் தமிழக நகரங்களில் ஒரே நாளிலும், இந்தியா முழுமைக்கும் மூன்றே நாளிலும் டெலிவரி. அதுமட்டும் இல்லாது அமேரிக்கா, அமீரகம், லண்டன், ஐரோப்பா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஐந்தே நாட்களில் டெலிவரி செய்கிறார்கள். நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் குறிப்பிட்ட நாளுக்குள் டெலிவரி செய்யப்படும்.


 
 
வரும் செப்டம்பர் 30 தேதி வரை  பேர் உவகைப் பெட்டகம் உள்ளிட்ட நேட்டிவ்ஸ்பெஷலின் சிறந்த தீபாவளி இன்சுவை இனிப்புப் பெட்டகங்களில் அட்வான்ஸ் புக்கிங் 30% தள்ளுபடியில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மிகக்குறைந்த விலையில் நிறைவான தீபாவளி இனிப்புகளை புக் செய்திடுங்கள். 16, 17 தேதிகளில் உங்கள் வீடு தேடி டெலிவரி செய்யப்படும்.
 
புது இளைஞர்கள் தொழில் முனையும் பொழுதுதான் புது முயற்சிகள் கையிலெடுக்கப்படும் எனும் சொல்லாடலுக்கு சான்று நேட்டிவ்ஸ்பெஷல்.காம்.