Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இனிப்பு தேங்காய் மோதகம் செய்ய....!

Widgets Magazine

தேவையான பொருட்கள்: 
 
கோதுமை மாவு - 2 கப் 
மைதா மாவு - 1/2 கப் 
நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் - 1 கப் 
தேங்காய் - 1 கப் (துருவியது) 
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் 
நெய் - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு).

 
செய்முறை: 
 
முதலில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்ற காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பௌலில் வெல்லம், ஏலக்காய் மற்றும்  வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டு, கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக சப்பாத்தி தேய்பதில் தேய்த்து, அதன் நடுவே தேங்காய் கலவையை  சிறிது வைத்து மூட வேண்டும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
 
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான தேங்காய்  மோதகம் தயார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இறால் பொடி செய்ய...!

கருவாட்டை நன்கு தண்ணீரில் அலசி, உலர வைத்துக்கொள்ளவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ...

news

கடலைப்பருப்பு சட்னி செய்ய...!

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர ...

news

சுவையான சைனீஸ் ஸ்டைல் மட்டன் சூப் செய்ய...!

உருளைக்கிழங்கு, கேரட்டினை தோல் நீக்கி துண்டுகளாக அரிந்துகொள்ளவும். மட்டனை சுத்தம் செய்து ...

news

வீட்டிலேயே செய்திடலாம் முட்டை பப்ஸ்...!

மைதா மாவுடன் உப்பையும், நெய்யையும் சேர்த்து கைகளால் நன்கு பிசறவும். பிறகு எலுமிச்சை ...

Widgets Magazine Widgets Magazine