Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கேழ்வரகு புட்டு செய்ய தெரியுமா...!

Widgets Magazine

கேழ்வரகு புட்டு இரண்டு வகைகளில் செய்வார்கள். ஒன்று வேர்க்கடலை, எள், வெல்லம் சேர்த்தது. மற்றொன்று தேங்காய்ப்பூ,  சர்க்கரை சேர்த்த‌து.

 
தேவையானவை:
 
கேழ்வரகு மாவு - ஒரு கப்
சர்க்கரை - தேவைக்கு
தேங்காய்ப்பூ - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
* கேழ்வரகு மாவில் துளி உப்பு போட்டுக் கலந்து (உப்பு சேர்ப்பது சுவைக்காகத்தான்) தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு இரண்டு கைகளாலும் மாவைப் பிசறினார்போல் கிளறவும்.
 
* தண்ணீரைச் சேக்கும்போது கொஞ்சம் கவனமாகச் சேர்க்க வேண்டும். அதிகமாகிவிட்டால் மாவு புட்டுபோல் இல்லாமல் குழைந்துவிடும். தண்ணீர் குறைவாக இருந்தால் புட்டு வேகாமல் வெண்மையாக இருக்கும்.
 
* பிசைந்த மாவைக் மாவைக் கையில் எடுத்து பிடிகொழுக்கட்டைக்குப் பிடிப்பதுபோல் பிடித்தால் பிடிக்க வரவேண்டும். பிறகு  அதையே உதிர்த்தால் உதிரவும் வேண்டும்.இந்தப் பக்குவத்தில் மாவைப் பிசறிய பிறகு ஒரு 10 நிமிடம் மூடி வைக்கவும்.
 
* பிறகு எடுத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும். அதன்பிறகு இட்லி அவிப்பதுபோல் இட்லித் தட்டில் ஈரத்துணி போட்டு  மாவை வேக வைத்து எடுக்கவும்.
 
* ஆவி வெந்து வாசனை வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி, உதிர்த்துவிட்டு தேங்காய்ப்பூ ,சர்க்கரை, ஏலத்தூள் சேர்த்துக்  கிளறிவிடவும். இப்போது சத்தான, சுவையான, இனிப்பான‌ கேழ்வரகு புட்டு சாப்பிடத் தயார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மகாராஷ்டிரா ஸ்டைல் மல்வானி இறால் குழம்பு!!

மல்வானி ஸ்டைல் இறால் குழம்பு செய்வது மிகவும் எளிமையானது. மேலும் இதனை செய்தால், வீட்டில் ...

news

காலிஃப்ளவர் பஜ்ஜி செய்ய தெரியுமா...!

காலிஃப்ளவரை இதுவரை மஞ்சூரியன் செய்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அதனை பஜ்ஜி ...

news

செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்ய...!

சிக்கனை கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க ...

news

சிறுதானியத்தில் செய்யப்படும் உணவு வகைகளைப் பற்றி பார்ப்போம்...!

சிறுதானியங்களின் அருமை தெரிந்திருந்தாலும், எப்படி அவற்றை சமையலில் பயன்படுத்துவது என்பது ...

Widgets Magazine Widgets Magazine