Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வீட்டிலே சுலபமாக செய்திடலாம் பாதுஷா...

Widgets Magazine

தேவையானபொருட்கள்:
 
மைதா - 1 1/2 கப் 
வெண்ணெய் - 1/2 கப் 
சர்க்கரை - 1/4 ஸ்பூன் 
பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன் 
தயிர் - 2 டேபிள்ஸ்பூன் 
எண்ணெய் - பொரிக்க
 
பாகு செய்ய:
 
சர்க்கரை - 1/2 கப் 
தண்ணீர் - 1/2 கப் 
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
 
 
செய்முறை:
 
* மைதா, பேக்கிங் சோடாவை கலந்து சலித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் உருக்கிய வெண்ணெய், தயிர், சர்க்கரை  அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.அதனுடன் சிறிது சிறிதாக மைதா மாவை சேர்க்கவும். 
 
* மாவை மிருதுவாக கெட்டியாக பிசையவும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது நீர் தெளித்துக் கெட்டியாக பிசையவும். குறைந்தது  15 நிமிடம் வரை மாவை நன்கு கைகளால் மிருதுவாக பிசையவும்.
 
* பின் நடுத்தர உருண்டையாக எடுத்து ஒரத்தில் மடித்து விடவும் அல்லது வடைபோல் தட்டில் கட்டை விரலால் குழிபோல் செய்யவும். கடாயில் எண்ணெயை காயவைக்கவும். மாவை சிறிது கிள்ளிபோட்டால் மாவு மேலே எழும்பி வரும்போது,  எண்ணெய் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி பாதுஷாக்களைப் போடவும்.
 
* பாதுஷா மேலே எழம்பி வரும்போது மீண்டும்கடாயை அடுப்பில் வைத்து சிறுதீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் வைத்து பிசுபிசுப்பு பதம் வரும்போது  எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும். பொரித்த பாதுஷாக்களை சூடான சர்க்கரை பாகில் 2 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.  சுவையான பாதுஷா தயார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சுவையான உருளைக்கிழங்கு போண்டா செய்ய...

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு ...

news

பலாக்காய் குழம்பு செய்ய வேண்டுமா!

ஒரு அகலமான பாத்திரத்தில் பாசிப்பருப்பை போட்டு பருப்பு முழ்கும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி ...

news

கொத்தமல்லி சட்னி தயாரிக்க இரண்டு வழிகள்...!

முதலில் கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் ...

news

தேங்காய்ப்பால் இறால் குழம்பு செய்ய வேண்டுமா...!

இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி ...

Widgets Magazine Widgets Magazine