1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 14 செப்டம்பர் 2017 (13:11 IST)

பள்ளி ஊழியர்களுக்கு உளவியல் சோதனை; மத்திய அரசு உத்தரவு

பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் 2 மாதங்களுக்குள் உளவியல் சோதனை நடத்த வேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.


 

 
அரியானா மாநிலத்தில் உள்ள குர்கரம் பகுதியில் இருக்கும் ரயன் சர்வதேச பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவன் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ, தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
 
அதில், பள்ளியில் பாதுகாப்பான சூழல் நிலவ வேண்டும் என்பது பள்ளி மாணவனின் அடிப்படை உரிமையாகும். பள்ளி வளாகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது பள்ளிக்கான தனிப்பட்ட உரிமையாகும். பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்கள் உள்பட அனைத்து ஊழியர்களும் உளவியல் சோதனை நடத்த வேண்டும். இந்த உளவியல் சோதனையை 2 மாத காலத்திற்குள் நடத்தி, அதன் அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.
 
இவ்வாறு சிபிஎஸ்இ சார்ப்பில் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.