செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2017 (22:00 IST)

ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தால் சோப்புக்கட்டி வருதே! அதிர்ச்சியை கொடுத்த அமேசான்

ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் கொடுப்பது என்பது தற்போது அன்றாட வழக்கமாகிவிட்டது. சோப்பு, சீப்பு முதல் ஸ்மார்ட்போன்கள் வரை ஆன்லைனில் இகாமர்ஸ் இணையதளங்கள் மூலம் ஆர்டர் செய்து வருகின்றனர்



 
 
இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த சிராஹ் தவான் என்பவர் ஒன்ப்ளஸ் மாடல் ஒன்றை அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் கொடுத்துள்ளார். இரண்டே நாட்களில் பார்சலும் வந்தது. டெலிவரி கொடுத்த நபரிடம் பணத்தை கொடுத்துவிட்டு ஆசை ஆசையாய் பார்சலை பிரித்தார். ஆனால் உள்ளே இருந்ததோ ஸ்மார்ட்போனுக்கு பதில் சோப்புக்கட்டி
 
இதனால் அதிர்ச்சி அடைந்த தவான் உடனடியாக அமேசான் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விபரத்தை கூறினார். ஆனால் அவர்கள் கம்ப்ளைண்ட் என்று ஒரு நம்பர் கொடுத்து அதில் கூறுமாறு சொன்னார்களாம். அதற்கு போன் செய்தால் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. உடனே கடுப்பான தவான் சோப்புக்கட்டியை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டார். இது நடந்து ஒருசில நிமிடங்களில் அமேசான் பெயர் இந்திய அளவில் டேமேஜ் ஆனது. உடனடியாக தவானுக்கு நீதியும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தகக்து.