வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2017 (22:29 IST)

பெண்களின் மார்பு, இடுப்பு எந்த சைஸில் இருக்க வேண்டும். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடமா இது?

அழகான பெண்களின் மார்பு, இடுப்பு, மற்றும் பின்பக்கம் எந்த சைஸில் இருக்க வேண்டும் என்றும் இந்த உறுப்புகள் 36-24-36 என்ற விகித்ததில் இருக்கும் பெண்கள் அழகானவர்கள் என்றும் சிபிஎஸ்இ பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் கடும் சர்ச்சை எழுத்துள்ளது.




 


சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் " உடல் நலம் மற்றும் உடற்கல்வி" என்ற புத்தகம் இணைக்கப்பட்டுள்ளது. முனைவர் வி.கே.சர்மா எழுதிய இந்த புத்தகத்தைதான் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு படிக்கும் பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த புத்தகத்தில் அழகான பெண்களின் மார்பு, இடுப்பு மற்றும் பின்பக்கம் ‘36-24-36‘ என்ற சைஸில் இருக்க  வேண்டும் என்றும் அதேபோல் அழகான ஆண்கள் V வடிவம் கொண்டவர்கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாட திட்டத்திற்கு சமூக நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த அழகுக்குறிப்பை படிக்கவா மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர் என்று அவர்கள் இணையதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.