வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 11 மே 2017 (07:19 IST)

அதுல காட்டுன அக்கறையை இதுல காட்டியிருக்கலாமே! நீட் அதிகாரிகளுக்கு கண்டனம்

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களை தீவிரவாதிகள் போல கெடுபிடிகள் காட்டிய அக்கறையில் நீட் தேர்வின் வினாத்தாளில் அதிகாரிகள் காட்டவில்லை. வினாத்தாளில் 4 தவறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்த  4 தவறான கேள்விகளுக்கான தீர்வு குறித்து சி.பி.எஸ்.இ. தற்போது விளக்கம் அளித்தது.





இதுகுறித்து சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் கூறியபோது, 'நீட் தேர்வு கேள்விகளில் இடம்பெற்ற தவறுகள், முற்றிலும் கல்வி சம்பந்தப்பட்டவை. அவற்றுக்கு பாட நிபுணர்கள் தீர்வு அளிப்பார்கள். ‘நீட்’ தேர்வுக்கான அதிகாரபூர்வ விடைகள் வெளியிடப்படும்போது, மாணவர்கள் தங்கள் ஆட்சேபனைகளை எழுப்பலாம்' என்று கூறியுள்ளனர்.

நீட் தேர்வு வினாத்தாளில், 'ஒரு கேள்விக்கு, கொடுக்கப்பட்டிருந்த 4 விடைகளில், 2 விடைகள் சரியானவையாக இருந்ததாகவும்,  மற்றொரு கேள்விக்கு, கொடுக்கப்பட்டிருந்த 4 விடைகளுமே தவறானவையாக இருந்ததாகவும், இயற்பியல் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி தவறாக இருந்ததாகதாகவும் மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அகில இந்திய அளவில் நடைபெறும் ஒரு தேர்வில் நான்கு தவறான கேள்விகள் இருக்கும் அளவிற்கு அதிகாரிகளின் அலட்சியம் இருப்பது குறித்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.