Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

செல்போனுக்காக குழந்தையை விற்ற தந்தை - ஒடிசாவில் அதிர்ச்சி

வியாழன், 14 செப்டம்பர் 2017 (10:39 IST)

Widgets Magazine

தனது ஆண் குழந்தையை விற்று அதில் செல்போன் வாங்கிய தந்தை பற்றிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஓடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டத்தில் வசிப்பவர்கள் பலராம் முகி. இவருக்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அந்நிலையில், கடந்த வருடம் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 


 

 
இந்நிலையில், கையில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட பலராம்,  அந்த ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரம் ரூபாய்க்கு ஒருவரிடம் விற்றுள்ளார். அதோடு, அந்த பணத்தில் செல்போன், பெண் குழந்தைக்கு கொலுசு மற்றும் மனைவிக்கு புடவை ஆகியவை வாங்கியுள்ளார்.
 
இந்த விவகாரம் எப்படியோ வெளியே கசிய, அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அதில், சோம்நாத் சேதி என்பவரிடம் பலராம் தனது குழந்தையை விற்றுள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
 
சோம்நாத்திடம் நடத்திய விசாரணையில், அவரின் 24 வயது மகன் 2012ம் ஆண்டு இறந்து விட்டதால், தனது மனைவியின் வேதனையை போக்க, பலராமிடம் பணம் கொடுத்து அந்த குழந்தையை வாங்கியதாக அவர் கூறினார்.
 
இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜனாதிபதி சந்திப்பு..அதன் பின் நீதிமன்றம் - தினகரனின் அதிரடி திட்டம்

தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை ஜனாதிபதி இல்லத்திற்கு அழைத்து செல்லும் முயற்சியில் தினகரன் ...

news

'நிச்சயமாக நான் உங்களுடன் இருப்பேன்: ராம்ஜெத்மலானிக்கு வாக்கு கொடுத்த வைகோ

சமீபத்தில் வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ...

news

ஒரே ஒரு கேரிபேக்கின் விலை ரூ.8 ஆயிரம்! நம்ப முடிகிறதா?

கடைகளில் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கேரிபேக்கில் போட்டு கொடுக்கும் ...

news

மனிதர்கள் வாழ தகுதியில்லாத இடமா தனுஷ்கோடி? ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவு

1964ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழகத்தின் முக்கிய வணிகப்பகுதியாகவும், துறைமுக பகுதியாகவும் ...

Widgets Magazine Widgets Magazine