Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

10 வயது சிறுமியை 10ஆயிரம் ரூபாய்க்கு அடிமையாக்கிய ஐடி தம்பதி


sivalingam| Last Modified வியாழன், 14 செப்டம்பர் 2017 (05:01 IST)
வீட்டு வேலை செய்வதற்காக பத்து வயது சிறுமியை பத்தாயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி அடிமை போல வேலை வாங்கிய ஐடி தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி எழுப்பியுள்ளனர்.


 
 
ஐதராபாத்தை சேர்ந்த ஐடி தம்பதியினர் ரகுராம் மற்றும் சங்கீதா. இவர்கள் இருவரும் பகல், இரவு என மாறி மாறி ஐடி நிறுவனங்களில் வேலை செய்வதால் வீட்டு வேலைக்காக மகாராஷ்டிராவை சேர்ந்த 10 வயது சிறுமியை பத்தாயிரம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர்.
 
தினமும் ஒருவேளை உணவு மட்டுமே கொடுத்து அதிக நேரம் வேலை வாங்கியதோடு அவ்வப்போது அடித்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர். ஒருமுறை பால்கனியில் இருந்து சாலையில் நடந்து சென்றவரிடம் பேசியதாக கட்டி வைத்து அடித்ததாகவும் கூறப்படுகிறது
 
இந்த சிறுமி துன்புறுவதை அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த சிறுமியை மீட்டதோடு, ஐடி தம்பதியினர்களை விசாரணை செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :