பெர்லின் பூங்கா: போதைக்கும், பாலியல் தொழிலுக்கும் ஏற்ற இடம்!!
பெர்லின் பூங்காவில் போதை பொருட்கள் விற்பனையும், பாலியல் தொழிலும் அதிக அளவில் நடப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜெர்மெனியில் உள்ள பெர்லின் பூங்காவில் கடந்த செப்டம்பர் மாதம் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்ததில் 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இதனால், அந்த பூங்கா பாதுகாப்பற்ற இடமாக கருதப்பட்டு, உள்ளூர் அரசியல் தலைவர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் அந்த பூங்காவில் வீடு இல்லாத பலரும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெர்லின் பூங்காவின் சுற்று பகுதி அடர்ந்த வனபகுதி போல் உள்ளதால் போதைபொருள் விற்பனையும், பாலியல் தொழிலும் அமோகமாக நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகார் குறித்து விரைவில் நடவடிகைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.