“இப்போதைக்கு ‘அந்த’ படத்துல நடிக்க மாட்டேன்” – ஸ்ருதி ஹாசன்

cauveri manickam| Last Modified செவ்வாய், 10 அக்டோபர் 2017 (18:32 IST)
‘இப்போதைக்கு கன்னடப் படத்தில் நடிக்கும் எண்ணம் இல்லை’ என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். 
ஹிந்தியில் ராஜ்குமார் ராவ் ஜோடியாக நடித்த ‘பெஹன் கோஹி டெரி’ மற்றும் தெலுங்கில் ‘கட்டமராயுடு’ ஆகிய படங்கள் தான் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்தவை. அதன்பிறகு, தந்தை கமல் இயக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் கமிட்டானார். அந்தப் படம் பாதியிலேயே நிற்கிறது,தொடர்ந்து, சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் கமிட்டானவர், அதிலிருந்து விலகியும் விட்டார். தற்போது அவர் கைவசம் எந்தப் படமும் இல்லை.

இந்நிலையில், அவர் கன்னடப் படமொன்றில் கமிட்டானதாகத் தகவல் வந்தது. ஆனால், ‘அப்படி எந்தப் படத்திலும் நான் நடிக்கவில்லை. அதைப்பற்றி பேச்சுவார்த்தை கூட நடக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :