Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நீதிமன்றத்தில் சரணடைந்த நடிகர் ஜெய்....


Murugan| Last Modified சனி, 7 அக்டோபர் 2017 (11:09 IST)
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் எதிரொலியாக நடிகர் ஜெய் இன்று காலை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 

 
சென்னை 28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெய், கடந்த மாதம் 21-ஆம் தேதி குடி போதையில் தன்னுடைய விலை உயர்ந்த ஆடி காரை அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தினார். 
 
அவருடன் நடிகர் பிரேம்ஜியும் இருந்தார். யாருக்கும் அடிபடவில்லை என்றாலும், போதையில் இருந்ததால் அவர்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. ஜெய் ஏற்படுத்திய விபத்து குடிபோதையில் நடைபெற்றது என்பதால் எவ்வித சமரசமும் இல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பறித்து கைது செய்து ஜாமீனில் விடுவித்தது காவல்துறை. 
 
அந்த வழக்கின் விசாரணை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 4ம் தேதி நடைபெற்றது. விசாரணையின்போது ஜெய் நேரில் ஆஜராகி, குற்றப்பத்திரிகையின் நகலைப் பெற்றுக் கொண்டார். மீடியாவில் சிக்க கூடாது என்பதற்காக முன்னதாகவே யாருக்கும் தெரியாமல் நீதிமன்றத்திற்கு வந்த ஜெய், தன்னுடைய காரில் காத்திருந்தார். 
 
மீடியாக்கள் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்து கொண்ட பிறகு வேகமாக நீதிமன்றத்திற்குள் சென்று, குற்றப்பத்திரிகையின் நகலை வாங்கி உடனே காரில் ஏறி சென்றுவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை, நேற்றும் நடைபெற்றது. 
 
ஒரு சினிமா நட்சத்திரத்துக்கு நீதிமன்றம் என்ன தண்டனை வழங்க உள்ளது என்பதை தெரிந்துகொள்ள ஊடகங்கள் நேற்று ஜெய் வரும் முன்னரே காத்திருந்தன. ஆனால் நடிகர் ஜெய் கடைசி வரை வராமலே போனார். இதனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் ஜெய் ஆஜராகாத்தால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்தனர்.
 
இந்நிலையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், வேறு வழியின்றி இன்று காலை சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஜெய் ஆஜரானார். தற்போது அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. அவருக்கு என்ன தண்டனை என்பதை நீதிமன்றம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :