நடிகர் ஜெய் இனிமேல் கார் ஓட்ட முடியாதா?


sivalingam| Last Modified சனி, 23 செப்டம்பர் 2017 (07:16 IST)
நடிகர் ஜெய் சமீபத்தில் குடிபோதையில் கார் ஓட்டி அடையார் தடுப்பு பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.


 
 
ஏற்கனவே இவர் கடந்த 2014ஆம் ஆண்டும் இதேபோல் குடிபோதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளாகியுள்ளார் என்பதால் இவருடைய டிரைவிங் லைசென்ஸை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
இதற்கு ஜெய் கொடுக்கும் விளக்கம் அதிகாரிகளுக்கு திருப்தி இல்லை என்றால் அவருடைய லைசென்ஸ் ரத்தாக வாய்ப்பு உள்ளதாகவும், அப்படி நடந்தால் இனிமேல் ஜெய் கார் ஓட்டவே முடியாது என்றும் கூறப்படுகிறது. 
 
இவ்வாறு குடித்து விட்டு கார் ஓட்டி விபத்துக்களை ஏற்படுவதால் சாலையில் செல்லும் அப்பாவிகளின் உயிர் கேள்விக்குறி ஆவது என்றும் ஜெய் போன்றவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும் சமூல நல ஆர்வலர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகக்து.


இதில் மேலும் படிக்கவும் :