வாயை விட்டு மாட்டிக்கொண்ட நடிகர் ஜெய் - வச்சு செய்யும் நெட்டிசன்கள்


Murugan| Last Modified ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (09:54 IST)
போதையில் காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்தி வழக்கில் சிக்கிய நடிகர் ஜெய், தனது டிவிட்டர் பக்கத்தில் வாயை விட்டு மாட்டிக்கொண்டுள்ளார்.

 

 
சுப்பிரமணிய புரம், கோவா, ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஜெய். இவர் சமீபத்தில் மதுஅருந்தி விட்டு காரில் சென்ற போது அடையாறு பாலம் அருகில் விபத்து ஏற்பட்டது.
 
அதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மேலும், அவரது வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், அவரிடம் அசல் ஒட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ், ஆர்.சி. என எந்த ஆவணமும் இல்லை எனவும் தகவல் வெளியானது.
 
இந்நிலையில், அவர் மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியது பற்றி நெட்டிசன்கள் அவரிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்ப, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சிம்பிளாக் ’ பீஸ் புரோ’ என பதிலளித்துள்ளார்.


 

 
சமீபத்தில் வெளியான மெர்சல் டீசரில் விஜய் ‘பீஸ் புரோ’ என்று கூறுவார். அதைத்தான் ஜெய் பயன்படுத்தியுள்ளார்.
 
இதையடுத்து, அவரை நெட்டிசன்கள் ஏகத்துக்கும் கலாய்த்து வருகின்றனர்.
இதில் மேலும் படிக்கவும் :