இந்த படத்துக்கு ’டபுள் ஏ’ சான்றிதழ்தான் கொடுக்கனும்: திணறிய சென்சார் போர்ட்!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 11 அக்டோபர் 2017 (19:49 IST)
ஜெயிக்கிற குதிர படத்தை பார்த்த தணிக்கை குழு, இந்த படத்திற்கு ‘டபுள் ஏ’ சான்றிதழ்தான் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளது. 

 
 
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நடித்துள்ள படம் ‘ஜெயிக்கிற குதிர’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக டிம்பிள் கோபர்டே, சாக்ஷி அகர்வால், அஸ்வினி என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு தணிக்கைக்கு சென்றது இப்படம். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
 
படத்தில் தாராள கவர்ச்சி காட்சிகளும், படம் முழுக்க இருந்த டபுள் மீனிங் டயலாக் பார்த்து தணிக்கை குழுவினர் படத்திற்கு சான்றிதழ் தான் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
 
அதோடு காட்சிகள் பலவற்றை நீக்கி, காட்சி நீளத்தை குறைத்து, டபுள் மீனிங்க வசனங்களை குறைத்து ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :