வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 7 அக்டோபர் 2017 (17:08 IST)

குழந்தை ரசிகர்களை இழக்கிறாரா விஜய்?

‘மெர்சல்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதன் மூலம், குழந்தை ரசிகர்களை விஜய் இழக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


 

 

விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம், 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் இந்தப் படத்துக்கு, சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். அப்படியானால், பெற்றோருடனோ அல்லது பெற்றோர் அனுமதித்தால் மட்டுமே இந்தப் படத்தைக் குழந்தைகள் பார்க்க முடியும். விஜய்க்கென இருக்கும் ரசிகர் பட்டாளங்களில், குழந்தைகள் மிக முக்கியப்பங்கு வகித்து வருகின்றனர். விஜய்யின் இத்தனை வருட வெற்றிக்கு அதுவும் முக்கிய காரணம். ஏற்கெனவே, சிவகார்த்திகேயன் வேறு குழந்தைகளைக் கவர்ந்துவிட்டார். இதை, ஒரு மேடையில் விஜய்யே நேரடியாக சிவகார்த்திகேயனிடம் கூறினார். அப்படியிருக்க, இந்த யு/ஏ சான்றிதழால் மிச்சமிருக்கும் குழந்தை ரசிகர்களையும் இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார் விஜய்.