லைகா-உதயநிதி கூட்டணிக்கு கிடைத்த UA' சான்றிதழ்


sivalingam| Last Modified செவ்வாய், 3 அக்டோபர் 2017 (22:54 IST)
நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இதுவரை தனது சொந்த பேனரில் மட்டுமே நடித்து கொண்டிருந்த நிலையில் தற்போது வெளி நிறுவனங்களின் படங்களிலும் நடித்து வருகிறார். 


 
 
இதன்படி லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படம் 'இப்படை வெல்லும்'. கவுரவ் நாராயணன் இயக்கி வரும் இந்த த்ரில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து ஒரு கட் கூட செய்யாமல் 'UA' சான்றிதழ் அளித்துள்ளனர். 
 
உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமாமோகன், ராதிகா, சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ரிச்சர்டு நாதன் ஒளிப்பதிவும், ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பும் செய்துள்ளனர். 
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :