வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (22:02 IST)

'ஸ்பைடர்' படத்திற்கு ஏன் 'யூஏ' சான்றிதழ்?

மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'ஸ்பைடர்' படத்தின் தெலுங்கு சென்சார் நேற்றும், இன்று தமிழ் சென்சார் சான்றிதழும் கிடைத்துள்ளது. இரண்டிலுமே இந்த படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.



 
 
இந்த படத்தில் மது அருந்தும் காட்சிகள், புகைப்பிடிக்கும் காட்சிகள் இல்லை. அதனால் படம் தொடங்குவதற்கு முன்பாக போடப்படும் குறும்படம் போட வேண்டிய அவசியம் இல்லை. அப்படியிருந்தும் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் கிடைக்காமல் 'யூஏ' சான்றிதழ் கிடைத்தது ஏன்? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.
 
இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் வன்முறை அதிகமாக இருப்பதாகவும், அதன் காரணமாகவே' யூஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
செப்டம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.