அமைச்சர் பொன்மாடி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், இது குறித்து தாமாக முன்வந்து ஐகோர்ட் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்ய பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பிரபலமான சுற்றுலா பகுதியாக இருக்கும் பெஹல்காமில், ரிசார்ட் பகுதியை அருகில் வைத்து நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளுக்கு எதிராக திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரச் சம்பவத்தில் 26 பயணிகள் தங்களுடைய உயிரிழந்தனர்.