வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : வியாழன், 12 அக்டோபர் 2017 (11:45 IST)

திருமணத்திற்கு பின் பெயரை மாற்றிய நடிகை சமந்தா...

நடிகை சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.


 

 
‘விண்ணைத் தாண்டி வருவாயா ’தெலுங்கு பதிப்பில் திரிஷா வேடத்தில் சமந்தா நடிக்க, அவருக்கு ஜோடியாக நடித்தவர் நாக தன்யா. அப்போதே, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
 
நாகசைதன்யா அக்னிநேனி குடும்பத்தை சேர்ந்தவர். தொடக்கத்தில், மகனின் காதலுக்கு நாகார்ஜுனா சம்மதம் தெரிவிக்கவில்லை. அதன் பின் ஒருவழியாக சம்மதத்தை பெற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சமந்தாவை மிகவும் பிடித்துபோனதால், இந்த திருமணத்தை தடபுடலாக செய்து முடித்துள்ளார் நாகார்ஜுனா.
 
அதற்கு நன்றி செலுத்தும் விதமாக, சமந்தா ருத் பிரபு என்கிற பெயரை சமந்தா அக்னினேனி என மாற்றிக்கொண்டுள்ளார் சமந்தா. தனது டிவிட்டர் பக்கத்திலும் பெயரை மாற்றிவிட்டார் சமந்தா.