காஜல் அகர்வால் விளம்பரத்துக்குத் தடைவிதித்த நீதிமன்றம்

Cauveri Manickam (Sasi)| Last Modified வியாழன், 12 அக்டோபர் 2017 (10:54 IST)
காஜல் அகர்வால் நடித்துள்ள விளம்பரத்தைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

 
தமிழ்நாட்டைச் சேர்ந்த விவிடி & சன்ஸ் தேங்காய் எண்ணெய் நிறுவனம், 2008ஆம் ஆண்டு காஜல் அகர்வாலை வைத்து ஒரு விளம்பரப் படம் எடுத்தது. அந்த விளம்பரத்தை, காண்ட்ராக்ட் முடிந்தும் அந்த நிறுவனம் பயன்படுத்தி வந்தது.
 
இதுகுறித்து காஜல் அகர்வால் அந்த நிறுவனத்திடம் பலமுறை கேட்டும் சரியான பதில் இல்லாத நிலையில், நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். மறு உத்தரவு வரும்வரை அந்த விளம்பரத்தைப் பயன்படுத்தக் கூடாது என சமீபத்தில் சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :