Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியாவின் இந்த குணத்தை பிக்பாஸ் காட்டவில்லை; நடிகை அனுயா ஓபன் டாக்

Sasikala| Last Modified வியாழன், 12 அக்டோபர் 2017 (11:34 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய குணத்தின் மூலம் மக்களின் பேரதரவை பெற்றவர் ஓவியா. ரசிகர்கள் மனதில் நீங்க இடம்  பிடித்து ஓவியா ஆர்மி உருவாக்கும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளார். 100 நாட்கள் முடிந்த பிறகும் கூட ஓவியாவின் புகழை பாடி கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

 
பிக்பாஸ் சீசன் 1 நிறைவுற்ற நிலையில், வெளியேறிய போட்டியாளர்கள் லவ் சேட் செய்தும், ஊடகங்களுக்கு பேட்டியளித்தும்  வருகின்றனர். பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒரு சிலர் மட்டுமே ஓவியாவை பற்றி தவறாக பேசி வருகின்றனர். அதுபோல  பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரமே எலிமினேட் ஆனவர் நடிகை அனுயா. இவர் ஓவியா பற்றி கூறும்போது, பிக்பாஸ்  நிகழ்ச்சியானது தன்னை தனக்கே யாரென்று காட்டும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் நான் யாரையும் வெறுக்கவும் இல்லை. சண்டை போடவும் இல்லை. என்னுடைய தோழி ஓவியாதான். நான் பிக்பாஸில் இருந்தபோது இரவில் விளக்குகள்  அணைந்த பிறகும் நான் தனியாக பாடி கொண்டிருப்பேன். என்னுடைய இந்த நடவடிக்கைகள் ஓவியாவிற்கு மிகவும் பிடிக்கும். அதனால் ஓவியா என்னை இரவில் பாட சொல்லி கேட்டு கொண்டே இருப்பார். இதெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  காட்டப்படவில்லை என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :